search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க கூட்டுப்படைகள்"

    அமெரிக்க கூட்டுப்படைகள் மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என சிரியா வலியுறுத்தி உள்ளது. #Syria #USCoalition
    டாமஸ்கஸ்:

    சிரியாவில் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான உள்நாட்டு போர் 7 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. மற்றொருபுறம் அந்நாடு ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாகவும் திகழ்கிறது. அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    ஆனால் அமெரிக்க கூட்டுப்படைகள் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், கூட்டுப்படைகளின் தாக்குதல்களில் அப்பாவி மக்களே அதிக அளவில் கொல்லப்படுவதாகவும் சிரியா தொடர்ந்து குற்றம் சாட்டுகிறது.

    எனவே அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் சிரியா மண்ணில் இருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டுமென சிரிய அரசு நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில், டீர்-அல்-சவுர் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாஜின் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க கூட்டுப்படைகள் ரசாயன தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது. இதில் பலர் கொல்லப்பட்டதாகவும், படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ள சிரிய அரசு, தொடர்ந்து இதுபோன்று குற்றங்களில் ஈடுபட்டு வரும் அமெரிக்க கூட்டுப்படைகள் மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை சிரிய மக்கள் மீது பயன்படுத்தி, சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமைகளை அமெரிக்க கூட்டுப்படைகள் வெளிப்படையாக மீறி வருகிறது. இதுபற்றி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும் சட்டத்துக்கு புறம்பாகவும், ஆக்கிரமிப்பு முறையிலும் சிரியாவில் அமெரிக்க படைகள் முகாமிட்டு இருப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    சிரியா நாட்டின் கிழக்குப்பகுதியில் ஈராக் எல்லையோரம் அமெரிக்க படைகள் ஐ.எஸ் பயங்கவாதிகளை குறிவைத்து நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 54 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Syria
    பெய்ரூட்:

    சிரியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கமும் உள்நாட்டு போராளிகளுக்கு உதவுவதாக களம் இறங்கியது. ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை அழிப்பதாக கூறி அமெரிக்கக்கூட்டு படைகளும் ஈராக்கில் நுழைந்து போர் நடத்தி வருகின்றன.

    இந்நிலையில், ஈராக் சிரியா எல்லைப்பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலர் பதுங்கி இருக்கின்றனர். இவர்கள் மீது போர் விமானங்கள் மூலம் அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 28 பொதுமக்கள் உட்பட 54 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியா போரை கண்காணித்து வரும் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

    ஆனால் இந்த தாக்குதல் குறித்து இதுவரை அமெரிக்கப்படை தரப்பில் இருந்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. #Syria
    ×